Saturday, April 21, 2018

கனவுலகின் கதாநாயகரே நிஜ வாழ்க்கைக்கு திருப்புவது எப்போது?




கோலாலம்பூர் – மனிதன் கனவு காண்பது இயல்பான ஒன்று ஆனால் ஒரு சிலர் கனவுலகில் மட்டுமே வாழ்கின்றனர். அதிலும் வேதமூர்த்தி அவ்வுலகத்தின் கதாநாகயர் போலும். ஆதலால் தான் எப்போதும் உண்மைக்கு புறம்பான அடிப்படை இல்லாதக் குற்றச்சாட்டை ம.இ.காவின் மீது திணிக்கிறார்.
அன்மையில் ம.இ.கா வெளியிட்ட இந்தியர்களுக்கான 14-வது பொதுத்தேர்தல் கொள்கை அறிக்கை நிகழ்ச்சியில் உறையாற்றிய ம.இ.கா தேசிய தலைவர் கூறுகையில், தேசிய முன்னணியின் மீது இந்தியர்களின் நம்பிக்கை 60% மேல் உயர்ந்துள்ளது என்றுக் குறிப்பிட்டர். அக்கணிப்பனது நாட்டில் உள்ள 800,000 இந்திய வாக்களர்களிடம் நடத்தப்பட்ட 
கருத்துகணிப்பாகும். ஆனால் அக்கணிப்பில் உண்மை இல்லை என்றும் கனவுலகில் வாழ்கிறது ம.இ.கா என்றும் தமிழ் பத்திரிகை ஒன்றில் கூறியது வேடிக்கையாக உள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில் அக்கணிப்பானது கடந்த தேர்தலை காட்டிலும் அதிகம் என்றும் கடந்த தேர்தலில் ஹிண்ட்ராப் தேசிய முன்னணியுடன் கைக்கோர்த்ததால் தான் அதிகரித்ததே தவிர ம.இ.காவினால் இல்லை என்றும் தெரிவித்தார்.
எத்தனை காலத்திற்குத்தான் இப்படி மக்களை குழப்ப நினைகின்றார் இந்த வேதமூர்த்தி. முதலில், உங்களது நிலைபாடுதான் என்ன. ஏனென்றால் ஆரம்பக்கட்ட போராட்டத்தில் முன்னால் பிரதமர் துன் மகாதீர் ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஏமாற்றிவிட்டதாக கூறினார். பின்பு நமது பிரதமருடன் இணங்குகிறேன் என்றுக் கூறி துணைப்பிரதமர் பதவியும் பெற்றுக்கொண்டார். அடுத்து அப்பதவியையும் ராஜினாமா செய்தார். இன்று மீண்டும் நம்பிக்கைக் கூட்டனியுடன் கைக்கோர்த்து விட்டார்.
இப்படி ஒவ்வொரு நேரமும் தன்னிலை அற்று கட்சித்தாவும் தாங்களா இந்தியர்களை வழி நடத்தி நல்ல தலைமைத்துவத்தை உறுவாக்கப்போகிறீர். உங்களது சுய நலத்திற்கு நீங்கள் பலிகொடுத்தவர்களை மறந்துவிட்டீரா அல்லது மக்கள்தான் இனியும் உங்களது கபட 
நாடகத்திற்கு இசைபாடுவார்களா என்று. மேலும், ம.இ.கா இதுநாள் வரை இந்தியர்களுக்கு என்ன செய்தது என்றுக் கேள்விக்கேட்க முதலில் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நமது பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் ம.இ.கா எத்தனையோ நற்செயல்களை அவ்வண்னம் செய்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் அன்மைய நிலவரமானது நாட்டின் 525 புதிய தமிழ்ப்பள்ளி கட்டிமுடித்து கல்வி இலாக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது ஆகும். சொல்லின் செல்வனாய் நடப்பு தமிழ்ப்பள்ளியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். அந்த அளவில், உங்களது கேள்விக்கு இந்த ஒரு சான்றே போதுமானதாகும்.
ஆக, இந்தியர்களின் கல்வி, சமுதாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அயராது உழைப்பது ம.இ.காதான் என்றால் அது மிகையாகாது. அதனால் தான் உண்மை நிலவரம் என்ன என்பதை மக்கள் நன்குணர்ந்து இன்று தேசிய முன்னணி மீதும் ம.இ.காவின் மீதும் நம்பிக்கையை அதிகரித்துள்ளனர். இது உங்கள் கண்ணில் தெண்படவில்லை என்பதனால் ம.இ.காவை கனவு காண்கிறது என்றுக் கூறுவது சிந்தனைக்கு ஒவ்வாது. ஆதலால் இனியும் உங்களது வியாக்யானம் இந்தியர்கள் மத்தியில் செல்லாது என்பதனை அறிந்திடுக.

 
Kini DAP memakai selimut PKR pula. Musang DAP berbulu ayam PKR, DAP Berlogo PKR. Juga cuba menipu pengundi?

Lagu PAS Irama Melayu asli



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails